• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடுவட்டம் அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி அதிமுக ஒன்றியம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவும் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவு நீர் கட்டண வரி உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவைகளால் தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறி தமிழகம் முழுவதும் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு டேன்டீ தேயிலை தொழிற்சாலையை வனத்துறையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை எடுத்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் விரைந்து கட்டி தர வலியுறுத்தியும், வனவிலங்குகளிடமிருந்து கூடலூர் மக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடுவட்டம் பேருராட்சி அதிமுக ஒன்றியம் சார்பில் நடுவட்டம் பகுதியில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டன. இதில் கூடலூர் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், முன்னாள் அமைச்சர் மில்லர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.