• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை
கைப்பற்றும் காங்கிரஸ்..!

இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை முக்கிய கட்சிகளாக களமிறங்கின. இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைவது உறுதியாகியுள்ளது. ஆளும் கட்சியான பாஜக 26 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் இமாச்சலபிரதேசத்தில் பாஜகவின் தோல்வி உறுதியாகியுள்ளது. மேலும், சுயேட்சைகள் 3 பேர் முன்னிலையில் உள்ளனர். 39 இடங்களில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. இதன் மூலம் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.