• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கூடலூர் அரிசி ராஜா பி.எம். 2 யானை பிடிப்பட்டது

  நீலிகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பொதுமக்களை தாக்கி ,வீடுகளை சேதப்படுத்திய அரிசிராஜா பி.எம்.2யானை பிடிப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் முன் கல்யாணி என்ற மூதாட்டியை கொன்ற அரிசி ராஜா பல வீடுகளையும் சேதப்படுத்தி வந்த நிலையில் இன்று தேவாலா டேன்டீ (4) நம்பர் பகுதியில் முத்துசாமி (55) என்பவரை தாக்கியதில் காலில் பலத்த காயத்துடன் பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏ.சி.எப் கருப்பசாமி தலைமையில் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் பல நாட் களாக டிரோன் மூலம் தேடிவந்த நிலையில் இன்று புளியம்பாறை பகுதியில் கும்கிகள் வசீம்,விஜய்,கிருஷ்ணன்,சுஜய் ஆகியவை உதவியுடன் சுற்றிவளைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனால் கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெறும் மகிழ்ச்சியில் உள்ளனர்.