• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

டாப் 10 செய்திகள்!…

Byமதி

Oct 8, 2021
  1. இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. மத்திய அரசின் திட்டங்கள் சரியான முறையில் நடைமுறைபடுத்தப்படுவதை கண்காணிக்க குழு ஒன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
  3. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1359 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
  4. இந்திய எல்லை அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய தவாங் பகுதியில் சீனப் படைகள் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயன்றபோது மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதல் சில மணி நேரங்கள் நீடித்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
  5. ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக கலவகுண்டா அணை நிரம்பி வெளியேறும் 2500 கனஅடி உபரி நீரால், பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  6. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடந்த தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
  7. 2021ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு மரியா ரெசா, டிமிட்ரி முராட்டோ ஆகிய இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  8. ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் மாகாணத்தின் மசூதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
  9. நடிகர் வடிவேலு நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
  1. “கருக்கலைப்பு செய்தேன்.. நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று நடிகை சமந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.