• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

காதலை சொன்ன சி.எஸ்.கே வீரர்!..

சிஎஸ்கே அணியின் கடைசி லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் பஞ்சாப் அணியுடன் நடைபெற்றது.


இதில் ராகுலின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் 98 ரன்கள் விளாசினார். இந்த போட்டி முடிந்த பிறகு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் தீபக் சாஹர், தனது தோழிக்கு காதலை வெளிப்படுத்தி மோதிரம் அணிவித்தார். இதன் மூலம் தீபக் சாஹர் கிரிக்கெட் ரசிகர்களிடத்தில் தனது நிச்சயதார்த்த நிகழ்வை உறுதி செய்தார். சாஹர் மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தீபக் சாஹருக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை – பஞ்சாப் போட்டியைவிட தீபக் சஹார் காதலை தெரிவித்தது ஹிட்டானது.