• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காரைக்குடியில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தியவர்களுக்கு அபராதம்!..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் மூடி இருந்ததால், பள்ளிகளில் படித்து வந்த ஒரு சிலர் தற்போது படிப்புகளை பாதியில் விட்டுவிட்டு கடைகளில் வேலைகள் செய்து வருவதாக குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இன்று குழந்தைகள் பாதுகாப்பு மாவட்ட அதிகாரி சைமன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். 16 வயது மட்டும் ஆன பத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை பணியில் வைத்திருந்த தொழிற்சாலை மற்றும் கம்பெனிகளின் உரிமையாளர்களிடம் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது என்றும் முதல்முறை
என்பதால் எச்சரிக்கை விடுத்து அபதாரம் விதித்தனர். இந்த ஆய்வில் குழந்தை
தொழிலாளர் நல நலத்துறை, கைடுலைன், பெண்கள் பாதுகாப்பு அலுவலர்கள், பெண் காவலர்கள் என நான்கு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்