• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் 360 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,70,075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6,046- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,33,433- ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,596 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.87 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.