• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

100 யூனிட் மின்சாரம் ரத்தாகுமா..?: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!

ByA.Tamilselvan

Nov 18, 2022

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் மானியம் மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “எல்லா இடங்களிலும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
00 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு எந்த பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆதாருடன் மின் கணக்கை இணைக்கா விட்டால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. ஒரு நுகர்வோர் 3 அல்லது 5 வீடுகள் வைத்திருந்தாலும், ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானிய மின்சாரம் தொடரும்.
ஆதார் எண்ணை இணைத்தால் மானிய மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று வரும் தகவல் வதந்தி. யார் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் பெறவே ஆதார் இணைப்பு” என தெரிவித்துள்ளார்.