• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

துணிவு பட இசைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ள அப்டேட்

ByA.Tamilselvan

Nov 18, 2022

பொங்கல் பண்டிகைக்கு வெளிவர உள்ள துணிவு படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து 3-வது முறையாக அஜித்-எச்.வினோத் கூட்டணியில் ‘துணிவு’
படத்தின் பணிகள் முடிந்துள்ளன.இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், அமீர், பாவனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது. இந்த படம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என தகவல்கள் வெளியான நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ‘துணிவு’ படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் தொடங்கியது. படத்தின் டீசர், டிரெய்லர், ரிலீஸ் தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் சின்ன ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.ஆம், தனது இசை கருவிகளுடன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “Working” என சொல்லியுள்ளார்.