• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாணவி பிரியா விவகாரம்- வழக்கு பிரிவு மாற்றம்

ByA.Tamilselvan

Nov 18, 2022

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியா வழக்கு வேறு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தவறான சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின்னர், பிரியா உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்ற பிரிவை மாற்றி கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என வழக்கு பதிந்துள்ளனர். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று கைது நடவடிக்கை தொடங்கும் என பெரவள்ளூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.