• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிணத்துக்கடவில் 9 மயில்கள் கொலை! வனத்துறையினர் விசாரணை!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பாரதி நகரில் குப்புசாமி என்ற விவசாயி தோட்டத்தில் மயில்கள் கொன்று வாழைதோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாக பொள்ளாச்சி வனசரக அலுவலர் புகழேந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூரில் உள்ள குப்புசாமியின் தோட்டத்திற்க்கு விரைந்த பொள்ளாச்சி வனத்துறையினர், வாழைத்தோப்பில் மூடப்பட்டிருந்த 3குழிகளை தோண்டிபார்த்த போது அங்கு ஒரு ஆண்மயில் மற்றும் 8பெண்மயில் என மொத்தம் 9மயில்கள் இறந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்!

புதைக்கப்பபட்ட 9 மயில்களை மீட்ட வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அரிசியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது! தற்போது விவசாயி குப்புசாமி தலைமறைவாக உள்ள நிலையில், அவரை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்..