• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ரஷியாவில் 850 மெக்டொனால்டு உணவகங்கள் தற்காலிகமாக மூடல்..!

Byகாயத்ரி

Mar 9, 2022

உக்ரைன் மீது ரஷியா தொடர் போர் மேற்கொண்டு வருகிறது. 14வது நாளான இன்றும் போர் நடந்து வரும் சூழலில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் ரஷியாவிற்கு ஈடுகொடுத்து வருகிறது.உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.இந்நிலையில், ரஷியாவில் உள்ள 850 உணவகங்களையும் மெக்டொனால்டு நிறுவனம் தற்காலிகமாக மூடுகிறோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த உணவகங்களில் 62,000 பேர் பணிபுரியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.