• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தேனியில் Digital Arrest என்று கூறி ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் 85 லட்சம் மோசடி, டெல்லி சேர்ந்த வாலிபர் கைது…

ByJeisriRam

Jul 30, 2024

தேனி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் ரூபாய் 84,50,000/- சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த மோசடி நபரை அதிரடியாக கைது செய்தனர்.

தேனி, கெங்குவார்பட்டியை சேர்ந்த பானுமதி(74). இவர் சென்னை IIT மற்றும் அமெரிக்காவில் உள்ள நார்த் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவரிடம் மும்பை காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக கூறி அவரின் ஆதார் எண் மூலம் சிம் கார்ட் வாங்கப்பட்டிருப்பதாகவும், அந்த சிம் வாட்ஸ் அப் மூலம் pornographic images பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாகவும், மும்பை கனரா வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் அதில் கோடி கணக்கில் ஹவாலா பண பரிவர்த்தனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதால், இதில் உங்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி, உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்திருப்பதாகவும் சொல்லி தனி அறையில் இருக்க வைத்து வெளி நபர் யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது என்று மிரட்டி அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த ரூ.84,50,000 பணத்தை அவர்கள் கொடுத்த வங்கி கணக்கு அனுப்ப வைத்து ஏமாற்றினார்.

இது தொடர்பாக தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பானுமதி அளித்த புகாரின் பேரில் தேனி எஸ் பி உத்தரவின் பேரில் தேனி சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் டெல்லி சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தொடர்புடைய டெல்லியை சேர்ந்த அபிஜித்சிங்(36) கைது செய்து அவரிடமிருந்து ரூ.44,000 பணம், 5 செல்போன்கள், 1 லேப்டாப், 103 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், 28 செக் புக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.