• Tue. Feb 24th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

கர்நாடகத்தில் 7-வது முறையாக நிலநடுக்கம்…

Byமதி

Oct 21, 2021

கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. விஜயபுராவில் உள்ள தனார்கி என்ற இடத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் 12 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் மிகவும் குறைந்த அளவில் இருந்ததாகவும், இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் புவியியல் ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

முன்னதாக சில நாட்களுக்கு முன் கர்நாடக்த்தின் பிதார் மற்றும் கல்புர்க்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 7-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.