• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

மக்களின் நாயகனாக வாழ்ந்து மறைந்த ஏபிஜே அப்துல்கலாமின் 7வது நினைவு தினம்…

Byகாயத்ரி

Jul 27, 2022

பாரதம் போற்றும் குடியரசு தலைவராக இருந்த ஏபிஜே அப்துல்கலாமின் 7வது நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள நினைவிடத்தில் உறவினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது கல்வியாலும் விடா முயற்சியாலும் நாட்டின் அக்னி நாயகனாக உருவெடுத்தவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம், ஏவுகணை நாயகன் எனவும் அழைக்கப்படுவர். அப்துல்கலாமுக்கு நாட்டின் உயரிய விருதான பாரதரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனையடுத்து தனது பணி ஓய்வுக்காலத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது தான் தனது கடமை எனக்கூறி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். குடியரசு தலைவராக அப்துல்கலாம் பணியாற்றிய காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள், அறிவுரை கூறும் ஜனாதிபதியாக திகழ்ந்தார். குடியரசு தலைவர் மாளிகையில் மாணவர்களுக்கான சிறப்பு அனுமதியும் வழங்கி இருந்தார். நாட்டில் உள்ள பல்வேறு பள்ளி கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனையடுத்த குடியரசு தலைவராக தனது 5 ஆண்டுகள் பணியை முடித்த அப்துல் கலாம் மகிழ்ச்சியாக பணி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின்னும் மாணவர்களுடனான் தனது கலந்துரையாடலை முடித்துக்கொள்ளவில்லை.

நாட்டின் கருப்பு தினமான 2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே மரணமடைந்தார். அப்துல் கலாமின் மரணம் நாட்டு மக்களை பெரும் சோகத்திலும் மீளாத் துயரத்திலும் ஆழத்தியது. இதனையடுத்து அரசு மரியாதையோடு அவரது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேக்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அப்துல்கலாம் நினைவைப்போற்றும் வகையில் மத்திய அரசு சார்பாக அப்துல் கலாம் நினைவகம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவரங்கத்தில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதனையடுத்து இன்று பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது உறவினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.