• Tue. Apr 23rd, 2024

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ByA.Tamilselvan

Jul 27, 2022

வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அதிகளவில் பொருட் சேதங்கள் ஏற்படுத்தி உள்ளது என்றும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் உலகின் பெரும்பாலான பூகம்பங்கள் ஏற்படுகிறது. . 1990ல் வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *