விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் இன்று 79வது சுதந்திரத் தின விழாவிற்கு நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிக் கண்ணன் தலைமை தாங்கினார், நகர மன்ற துணைத் தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார் .இந்நிகழ்ச்சியில் நகர அமைப்பு அலுவலர் வெங்கடேஷ், சுகாதார அலுவலர் கந்தசாமி ,உதவி பொறியாளர் திவாகர், அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் , தண்ணீர் விநியோகம் மேற்பார்வையாளர் ஜெயராஜ், சுகாதார ஆய்வாளர் சந்திரா, சங்கரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக நகர்மன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி ,முன்னாள் நகர் மன்ற தலைவர் பாலையா பிள்ளை என்ற சிவகாமி நாத பிள்ளை ஆகியோர் திரு உருவசிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
