• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

75ம் நெம்பர் வண்டி, 75வது நபர்… பெட்ரோல் பங்கில் அதிரடி!…

By

Aug 15, 2021

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் 75வது சுதந்திர தினவிழாவை வரவேற்கும் வகையில் 75வதாக வரும் நபருக்கு பெட்ரோல் விலையில் 75ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் நூதன முறையில் சுதந்திரம் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். பள்ளிபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளர் சுதந்திரத்தின் பெருமையை மக்கள் மத்தியில் உணர்த்தும் விதமாக அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளார்.

இன்று ஒரு நாள் மட்டும் 75 என்கிற வாகன பதிவு எண் கொண்ட வாகனத்திற்கும், ஒவ்வொரு 100 நபர்களில் 75வதாக வரும் நபர்களுக்கும் பெட்ரோல் விலையில் 75 ரூபாய் தள்ளுபடி செய்யபடும் என அறிவிப்பு பலகை வைத்து அசத்தியுள்ளார். பங்க் உரிமையாளரின் இந்த செயலுக்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.