• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 75வது சுதந்திர தின சிறப்பு கவிதை கட்டுரை போட்டிகள் உற்சாகமாக பங்கேற்ற மாணவ மாணவிகள்

75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக தமிழ் அஞ்சல் நாளிதழ் நெல்லை அரசு அருங்காட்சியகம் முகநூல் நண்பர்கள் குழு இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கான கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய தலைமை தாங்கினார்.

டக்கரம்மாள்புரம் டிடிடிஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி முதல்வர் உமா முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கவிதை மற்றும் கட்டுரை போட்டிகளில் பங்கேற்றனர். முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான டேவிட் வரவேற்று பேசினார். முகநூல் நண்பர்கள் குழு ஆலோசகர் முருகப்பன் மற்றும் கல்லூர் வெங்கடேசன், அன்னை மெஸ் ராஜா, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை மாலை 6 மணிக்கு அரசு அருங்காட்சியகத்தில் கவிதை கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் கலந்து கொள்கிறார்.