• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பெங்களூருவில் 75 ஆண்டுகளில் இல்லாத மழை… வீடியோ

ByA.Tamilselvan

Sep 6, 2022

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பெய்து வருவதால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகமழை பெறும் மாநிலமாக கர்நாடகம் இருந்தாலும். இந்த ஆண்டில் ஒரே நாளில் பெய்த 130 மிமீ மழையால் பெங்களூர் நகரமே வெள்ளக்காடாக மாறிப்போனது.முக்கிய சாலைகள் அனைத்தும் நீரில் முழ்கின. கார்கள், இருசக்கரவாகனங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் பள்ளி ,கல்லூரி ,அலுவலகங்களுக்கு செல்பவர்கள் டிராக்டர்களிலும், புல்டோசர்களிலும் ஏறிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலும் முடங்கியுள்ளது.