குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்ததின் 68_வது ஆண்டு விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவில் இருந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்து 68வது ஆண்டு குமரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் மார்ஷல் நேசமணி இவரது சிலை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ளது. இவரது சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Kt உதயம், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார் உட்பட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நாகர் கோவில் WWC சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஆலயத்தின் பின்புறம் உள்ள மார்சல் நேசமணி கல்லறைக்கு விஜய் வசந்த் MP மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.








