ஓலா மின்சாதன தயாரிப்பு குழுமத்தின் துணை தலைவர் டட்டா கூறும் போது, மாணவர்கள் கல்வி கற்பதுடன் நின்றுவிடக்கூடாது. புதிய சிந்தனைகள் உருவாக்கம் பெற வேண்டும். ஆட்டோ மொபைல் தொழில் துறையில் நவின காலத்தின் புதிய கண்டுபிடிப்புகள் உங்களது ஒவ்வொரு தனிப்பட்ட முயற்சியும், செயலும் சிறந்த முறையில் இருந்தால் உலக அளவில் வெற்றி பெறலாம். டட்டா – ஓலா குழும துணைத் தலைவர்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே அமைந்துள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 66வது கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தியாகராஜர் பொறியியல் கல்லூரி தாளாளர் ஹரி தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக டாடா குழுமத்தின் முதன்மை தொழில் மைய இயக்குனர் வேங்கசாமி ராமசாமி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திறமையும் , மன உறுதியையும் பிரயோகிக்கும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் , பிரச்சனைகளை தீர்வு காணும் பொழுது கற்றலின் நுட்பத்தையும் அதன் கட்டமைப்பையும் உபயோகிப்பது நமது நம்பிக்கையை மேம்படுத்தும். அதன் மூலம் திட்மிட்ட செயல் வெற்றி முடியும் என கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓலா மின்சாதன தயாரிப்பு குழுமத்தின் துணை தலைவர் டட்டா மாணவர்களிடம் கூறும் போது.
மாணவர்கள் கல்வி கற்பதுடன் நின்றுவிடக்கூடாது. புதிய சிந்தனைகள் உருவாக்கம் பெற வேண்டும். மாற்றம் பற்றிய சிந்தனை வந்தது மூலம் இன்று ரெட் பஸ் போன்ற செயல்முறைகள் கிடைத்துள்ளது.
ஆட்டோ மொபைல் தொழில் நவின காலத்தின் புதிய வழி உங்களது ஒவ்வொரு தனிப்பட்ட முயற்சியும் செயலும் சிறந்த முறையில் இருந்தால் உலக அளவில் வெற்றி பெறலாம்.
சுற்றுச்சூழல் நமக்கு இன்றியமையானது. சுற்றுச் சூழல் மேம்பட அதற்கு தகுந்தாற் போல் ஆட்டோ கொள்ள வேண்டும் பிரச்சனைகளை தீர்வு காணும் பொழுது கற்றலின் நுட்பத்தையும் அதன் கட்டமைப்பையும் உபயோகிப்பது நமது நம்பிக்கையை மேம்படுத்தும்.
தியாகராஜர் கல்லூரியின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் ஒலா குழும துணை இயக்குனர் டட்டா மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி தாளாளர் ஹரி தியாகராஜன், முதல்வர் பழனி நாதராஜன் ஆகியோர் மாணவர்களிடம் வழங்கினர். இதில் இயந்திரவியல் துறை மாணவன் பிரசார்த் கணின அறிவியல் மாணவி ஹரிணி, மினணனு மற்றும் தகவல் தொழில் தொடர்பு துறை யாழினிமலர், கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்பு கோகுல் ராஜ், ஆகிய 5 மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.