• Wed. May 8th, 2024

சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மதுரை கலெக்டர் சங்கீதா இஆப திறந்து வைத்தார்.

Byகுமார்

Mar 9, 2024

தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர சங்கீதா இஆப அவர்கள் திறந்து வைத்தார்.

செய்தித்துறை சார்பாக தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த விளக்க புகைப்படக் கண்காட்சியை மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகே திறந்து வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மக்களைத் தேடிமருத்துவம், உங்களைதேடி உங்கள்ஊரில், நீங்கள்நலமா, கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சரின் காலை உணவுதிட்டம், இலவச வீட்டுமனைப் பட்டாவழங்குதல், மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் இ.ஆ.ப., , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *