புதுச்சேரி பாகூர் அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர், சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள தன்னுடைய நிலத்தில் களை பறிக்கச் சென்றுள்ளார்.
அங்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சுமார் 28 வயதுள்ள இளைஞர் ஒருவர் இந்த முதாட்டியிடம், தன்னுடைய உறவினருக்கு பேச வேண்டும் என்று செல்போன் கேட்டுள்ளார்.
அதற்கு மூதாட்டி செல்போனை கொடுத்துள்ளார். அப்போது போனில் பேசுவது போல் நடித்து அருகில் கிடந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து அந்த மூதாட்டியின் பின்புற கழுத்தில் ஓங்கி அடித்துள்ளார். அதில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து, அந்த மூதாட்டியை ஒரு மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், உறவினர்கள் அந்த மூதாட்டிக்கு மதிய உணவு எடுத்து வந்துள்ளனர். அப்போது, நிலத்தில் அவரைக் காணாததால் சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளனர். அப்போது, அங்கிருந்த புதரில் இருந்து இளைஞர் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, மூதாட்டி மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்துள்ளார். நிலைமையை உணர்ந்த உறவினர்கள், தப்பியோடிய அந்த இளைஞரை துரத்திச் சென்றுள்ளனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதையடுத்து அந்த மூதாட்டியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ராஜீவ்காந்தி பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலின் பேரில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஒரு வாரமாக குற்றவாளி குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் குற்றவாளியை பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல் துறையினர், பாதிக்கப்பட்ட மூதாட்டி மற்றும் சம்பவம் அருகே இளைஞர் தப்பியோடியதை பார்த்த சிலர் கொடுத்த அங்க அடையாளங்களை வைத்து குற்றவாளியின் வரைபடத்தை வரைந்து வெளியிட்டுள்ளனர். அந்த வரைபடத்தைக் கொண்டு புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் போலீசார் உதவியுடன் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- நாளை பாரத் பந்த்..??? வெளியான அறவிப்பு…ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் […]
- அப்பாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்… நடிகர் சிம்பு ட்வீட்மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. […]
- கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவுதேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் […]
- மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்தல்-அதிமுகவில் இழுபறிமாநிலங்களவை எம்.பி வேட்பாளர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்திவருகிறது.பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் […]
- மேயர்… வந்தார், நின்றார், சென்றார்… புஷ்ஷாகி
போன மக்கள் குறைதீர் கூட்டம். மனு அளிக்க வந்தவர்கள் ஏமாற்றம்.மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்சிறப்பு முகாமிற்கு வந்த மேயர் இடையிலேயே சென்றுவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.மதுரை மாநகராட்சி […] - பக்தர்கள் மீது தாக்குதல்-கோயில்அர்ச்சகர் அராஜகம்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவில்( அர்ச்சகர் மாரிசாமியின் […]
- மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம்மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்மதுரை மாநகராட்சி […]
- ஆபாச போஸ்டர்- மக்கள் நீதிமய்ய கட்சியினர் மீது வழக்குமதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டரால் மக்கள் நீதி மய்ய கட்சியினர் மீது இரண்டு காவல்நிலையங்களில் […]
- ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய் தான்…வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் […]
- உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு புகழாரம்…சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு […]
- பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகைநாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் […]
- கோவில் விழாவில் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… உயர்நீதிமன்ற மதுரை கிளைகோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை […]
- இலங்கையில் அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை உயர்வுஇலங்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.இலங்கையில் டாலரும் இல்லை,ரூபாயும் […]
- பலாக்கொட்டை பொடிமாஸ்தேவையானவை:பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – […]
- 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடை விழா2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி […]