
நாகை மாவட்டத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 60 மாணவிகள் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பெண்கள் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விடுதியில்சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் துண்டுதுண்டாக பல்லி இருந்ததாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.