• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ரூ.200 கோடி போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர் கைது

ByA.Tamilselvan

Sep 14, 2022

குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்துக்கு அருகே இணைந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அப்போது ஜக்காவ் கடலோர பகுதியில் இருந்து 33 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் பாகிஸ்தானின் மீன்பிடி படகு ஒன்று இந்திய நீர்வழி பகுதியில் 6 கிலோ மீட்டர் வரை நுழைந்து இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர் இரண்டு விரைவு படகில் துரத்தி சென்று பாகிஸ்தான் படகை தடுத்து நிறுத்தினர். பின்னர் அதை சோதனை செய்தனர்.
கடலோர காவல் படையினரும், தீவிரவாத தடுப்பு பிரிவினரும் படகில் நடத்திய சோதனையில் 40 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.200 கோடியாகும்.