• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

* தமிழகத்தில் 57 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தவில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்*

Byமதி

Oct 21, 2021

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, அரசு சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12, 19, 26 ஆகிய தேதிகளில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த தடுப்பூசி முகாம்களில் பல லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கடந்த 3 மற்றும் 10 ஆம் தேதிகளில் 4-வது மற்றும் 5-வது மெகா தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் 6-வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி பகுதியில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 57 லட்சம் பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும், அவர்களுக்கு தடுப்பூசி முகாமில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இதுவரை 340 பேருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளதாகவும், டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.