சிறையிலிருக்கும் தனது மகன் ஆரியன் கானை சந்திக்க நடிகர் ஷாருக்கான் சிறைக்கு சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
போதை தடுப்புப் பிரிவு போலீசாரால் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறையில் அடைத்தது. 2 முறை ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்த போதும் அவற்றை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மும்பை மத்திய சிறையிலிருக்கும் தனது மகனைக்கான ஷாருக்கான் வருகை தந்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கிட்டதட்ட 20 நிமிடங்கள் ஷாருக்கான் – ஆர்யன் கான் சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆர்யன் கானுக்கு இன்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்யன் கான் கைதுக்கு பிறகு முதல்முறையாக ஷாருக்கான் பொதுவெளியில் தலைக்காட்டியுள்ளார்.