

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு, போடி அருகே தருமத்துபட்டி ஏ.எச்.எம்., டிரஸ்ட் பசுமை புரட்சி இயக்கம், தேனி கிரீன், வனத்துறை சார்பில், டி.எஸ்.பி., சுரேஷ் தலைமை வகித்தார். டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முகமது ஷேக் இப்ராஹிம், இயக்குனர் ஸ்டெல்லா முன்னிலையில், முந்தல் முதல் குரங்கணி வரை விதைப்பந்துகள் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது.


சுமார் 5,500 விதைப்பந்துகள் வனத்துறை அனுமதியுடன் பல்வேறு இடங்களில் தூவப்பட்டது. மேலும் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சான்றோர்கள் மற்றும் ஏ.எச்.எம்., தொண்டு நிறுவன ஊழியர்கள் இணைந்து வேம்பு, நாவல், புங்கை, பூவரசு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்று விதைப்பந்துகளை தூவும் பணியில் ஈடுபட்டனர்!
போடி வனச்சரக அதிகாரி விவின், பசுமை புரட்சி இயக்க நிறுவனர் பனைமுருகன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் மஞ்சு, உலக சிவனடியார் திருக்கூடம் மாவட்ட பொருப்பாளர் சிவ வீரக்குமார், போலீசார் மற்றும் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
