மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சாரண சாரணியர் இயக்கம் கடந்த 1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, இந்த ஆண்டு 50 வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் நிலையில் நாளை முப்பெரும் விழாவாக உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கும் நிலையில், இந்த முப்பெரும் விழாவின் துவக்கமாக இன்று உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவிலான 30 பள்ளிகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட சாரண சாரணியர் இயக்க மாணவ மாணவிகள் சமூக பதௌ விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.,
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய இந்த பேரணி, உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான கவணம்பட்டி ரோடு, பேரையூர் ரோடு, தேவர் சிலை, மதுரை ரோடு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது.,
போதை பொருள் ஒழிப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியபடி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,
நாளை 11.11.2025 நடைபெறும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.,











; ?>)
; ?>)
; ?>)