• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

ByA.Tamilselvan

Apr 5, 2023

நங்கநல்லூர் தர்மலிங்கேஸரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சென்னை நங்கநல்லூர் அருகே கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.