

ஹரியானா வில் சுரங்க குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 5பேர் பலியாகி உள்ளனர்.
ஹரியானா மாநிலம், பிவானி பகுதியில் சுரங்க குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் கடந்த சனிக்கிழமை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் பல வாகனங்கள் மண்ணில் புதைந்ததாக கூறப்பட்டு வந்து நிலையில் இதுவரை 5 பேர் உயிரிழந்ததாகவும் 2 பேர் காயமடைந்ததாகவும் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்புப்பணிகள் தீவிரமடைந்து வருகிறது.