5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..,
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த ராஜீவ்குமார், ஆவின் விஜிலென்ஸ் டிஜிபியாகவும், ஊர்க்காவல் படை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு பிரிவு டிஜிபி கே.வன்னிய பெருமாள் ரயில்வே பாதுகாப்பு பிரிவு டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து திட்டமிடல், சாலை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி. மல்லிகா, மாநில மனித உரிமை ஆணைய (புலனாய்வு) ஐ.ஜி.யாகவும், சென்னை ரயில்வே டிஐஜி அபிஷேக் தீக் ஷித் பதவி உயர்வு பெற்று, போக்குவரத்து திட்டமிடல், சாலை பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஆவின் விஜிலென்ஸ் எஸ்பி முத்தமிழ், சிவில் சப்ளைஸ் சிஐடி பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
