போடியில் போலி தங்கமூலம் பூசப்பட்ட 15 பவுன் நகை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியானது தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஐந்து குற்றவாளிகள் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
போடி பரமசிவன் கோவில் தெருவில் -சேகர் என்பவர் அடகு கடை மற்றும் நகை கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று – நேற்று மதியம் ஒரு மணி அளவில்15 பவுன் எடையுள்ள தங்கமூலம் பூசப்பட்ட போலி நகைகளை திண்டுக்கல்லை சேர்ந்த சதீஸ்வரன் தேனி பாலாபட்டியைச் சேர்ந்த கவின் தேவ் மற்றும் தினேஷ் தேனி உப்பு கோட்டையைச் சேர்ந்த சிவானந்தம் கம்பம் கூடலூரை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோர் காரில் வந்து நகைக்கடை முன்பு காரை நிறுத்தி விட்டு அடகு கடையில் 15 பவுன் நகை எடையுள்ள போலி நகைகளை அடகு வைக்க சென்றனர் அப்போது கடையில் இருந்த கடை உரிமையாளர் சேகர் நகையை சோதனை செய்தபோது இது போலி நகை என தெரிய வந்தன.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் செல்போன் மூலம் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் தகவலை அறிந்த காவல்துறையினர் குற்றவாளியை பிடிக்க முயன்ற போது காரில் தப்ப முயன்றனர் அப்போது காரினை மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்த ஒருவர் காரை விட்டு இறங்கி அருகியுள்ள சந்தில் – ஓட முயன்ற போது காவலர் விரட்டிச் சென்று குற்றவாளியை பிடித்தனர். 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து செய்தனர்.
விசாரணைக்காக எந்தெந்த கடையில் போடி பகுதியில் நகைகளை அடகு வைத்துள்ளனர் என பாலார்பட்டியை சேர்ந்தவரை அழைத்துச் சென்றபோது, அம்மா உணவாக முன்பாக காரின் கதவை திறந்து கொண்டு குற்றவாளி காரில் இருந்து தப்பி ஓடி ஓடினார். அவரை இரண்டு காவலர்கள் விரட்டி சென்று பிடித்து மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில் போடிப் பகுதிகளில் பல்வேறு அடகு கடையிலும் போலி நகைகளை அடகு வைத்ததாக ஒப்புக்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரை கைது செய்து அவர்கள் பயன்படுத்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதற்கு உடனடியாக இருந்த தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர். மேலும் இவர்களிடமிருந்து இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போடி பகுதிகளில் நகைக்கடை பஜார் கடந்த இரு தினங்களாக பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதுவரை வாங்கப்பட்ட அடகு கடைகளில் நகைகள் போலியா என ஆய்வு செய்து வருகின்றனர்.