• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கோவில்களில் 48 வது நாள் மண்டல பூஜை

ByN.Ravi

Oct 8, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பாலமரத்தம்மன் என்ற சுந்தரவள்ளி அம்மன், முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி 48 வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் யாகபூஜைகளை தொடர்ந்து, யாகசாலையில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட கோவில் கருவறையில் அமைந்துள்ள
பாலமரத்தம்மன் மற்றும் முத்தாலம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு 48 வது நாள் மண்டல பூஜை தொடர்ந்து 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மரியாதைகாரர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.