• Sat. Feb 21st, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 40,97,872 ரூபாய் ரொக்கமும், 0.83 கிராம் தங்கமும், 1கிலோ 385கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது…

ByKalamegam Viswanathan

Nov 30, 2023

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 40 லட்சத்து 97ஆயிரத்து 872 ரூபாய் ரொக்கமாகவும், 0.83 கிராம் தங்கமும், 1 கிலோ 385 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஐப்பசி மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.40 லட்சத்து, 97ஆயிரத்து 872 ரூபாய், தங்கம் 0.83 கிராம், வெள்ளி 1 கிலோ 385 கிராம் இருந்தது.

இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.