தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் எடையாளர் உள்ளிட்ட 4,000 பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரேஷன் கடைகளில் 4,000 விற்பனையாளர்கள் மற்றும் எடை அளப்பவர் பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி, விற்பனையாளர் பணிக்கு பிளஸ் 2 படித்தவரும், எடை அளப்பவர் பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் 4,000 பணியாளர்.. உடனடியாக நிரப்ப அரசு உத்தரவு..!
