• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தண்ணீர் தொட்டியில் விழுந்து 4-வயது குழந்தை பலி

ByKalamegam Viswanathan

Feb 8, 2023

மதுரை டிவிஎஸ் நகர் அருகே விளைக்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்ததில் பரிதாபமாக பலியானது.
மதுரை டி.வி.எஸ்.நகர், கோவலன் நகரை சேர்ந்தவர் காந்தேஸ்வரன்(வயது 34), இருசக்கர வாகன பழுது பார்க்கும் மெக்கானிக். இவரது 4-வயது குழந்தை ராஜவேல். சம்பவத்தன்று வீட்டின் முன்பு குழந்தை விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு தரையில் உள்ள தண்ணீர் சேமிக்கும் தொட்டியில் தவறி விழுந்தான். அவனது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் ராஜவேலை காப்பாற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் ராஜவேல் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.