• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து… திருச்சியைச் சேர்ந்த 4 பேர் பலி!

ByP.Kavitha Kumar

Jan 17, 2025

சித்தூர் அருகே லாரி மீது பேருந்து மோதி திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு
திரும்பி கொண்டிருந்த திருச்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

திருச்சியைச் சேர்ந்த 40 பேர் தனியார் பேருந்தில் நேற்று முன்தினம் திருப்பதி கோவிலுக்குச் சென்றனர். இந்த நிலையில் நேற்று சாமி தரிசனம் செய்து செய்துவிட்டு இரவில் திருச்சி திரும்பி கொண்டிருந்தனர்.

சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. கங்கசாகரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.