• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

100 பவுன் நகை கொள்ளை அடித்த வழக்கில் 4 பேர் கைது..,

BySeenu

Nov 1, 2025

கோவையில் குறைந்த விலைக்கு 100 பவுன் நகை தருவதாக கூறிய 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி, கம்பத்தைச் சேர்ந்தவர் விஜய், இவரும் இவரது உறவினருமான பாண்டீஸ்வரன் இணைந்து பழைய தங்க நகைகள் குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.

இவ்விருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கிளை சிறையில் இருந்த போது மதுரையைச் சேர்ந்த தர்மா என்றவருடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் விஜய், தர்மாவும் கடந்த சில வாரத்திற்கு முன்பு instagram மூலம் பேசி உள்ளனர். அப்பொழுது தான் பழைய தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்வதாக விஜய் கூறி உள்ளார். இதை அடுத்து தர்மா கோவையில் ஒருவரிடம் 100 பவுன் தங்க நகை உள்ளதாகவும், அதை 50 லட்சம் ரூபாய் கொடுத்து நாம் பெற்றுக் கொள்ளலாம், என தர்மா, விஜய்யிடம் கூறி உள்ளார். இதனை நம்பி விஜயும், பாண்டீஸ்வரனும் கடந்த 18 ஆம் தேதி கோவைக்கு வந்து உள்ளனர். அப்பொழுது தர்மா விஜய் நகையை வாங்கி செல்வதாக கூறி கோவை மேற்கு புறவழிச் சாலையில் மதுக்கரை நோக்கி காரில் அழைத்துச் சென்று இருந்தார். அப்பொழுது தர்மாவின் கூட்டாளிகள் எதிர் திசையில் காரில் அதிவேகமாக மோதுவது போல் வந்து உள்ளனர். தர்மா காரில் இருந்து பணத்துடன் இறங்கி எதிர் திசையில் வந்து தனது கூட்டாளிகளுடன் காரில் ஏறி தப்பிச் சென்று விட்டார். விஜய் அளித்த புகார் பேரில் காவல் துறை வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

அதில் அழகு பாண்டி, கோபி, முருகன் ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் தொடர்ச்சியாக தலைமுறைகளாக இருந்த சிவகங்கையை சேர்ந்த அருண்குமார், முத்து தமிழ்மாறன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கொள்ளை அடித்த பணத்துடன் தலைமறைவாக உள்ள தர்மா, டோலு (எ) வெங்கட் பிரபு, புலிப்பாண்டி மற்றும் ஹரி பிரசாத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த தர்மா என்ற தர்மராஜ், டோலு என்ற வெங்கட் பிரபு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த புலி பாண்டி என்ற பேச்சி, கோவை ஆலாந்துறையைச் சேர்ந்த ஹரி பிரசாத் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.CBE