கோவையில் இருந்து ரயில் மூலம் கேரளா சென்ற வியாபாரிகளிடம் போலீஸ் எனக் கூறி, ரூ.25 லட்சம் கொள்ளை அடித்த 4 பேரை வாளையார் போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அபூபக்கர் மற்றும் பத்ருதீன் தங்க நகை செய்து கொடுக்கும், பணியை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று கோவையில் தங்க நகைகளை விற்றுவிட்டு ரூ.25 லட்சம் பணத்துடன் இருவரும் போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து மலப்புரம் நோக்கிச் சென்றனர்.
அப்போது ரயிலில் வந்த ஐந்து பேர் தங்களை கேரளா சிறப்பு பிரிவு போலீஸ் எனக் கூறி போலி அடையாள அட்டையை காண்பித்துள்ளனர்.அபூபக்கர் மற்றும் பத்ருதீனிடமிருந்த ரூ 25 லட்சத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர்.பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாததால் வாளையாறு ரயில் நிலையத்தில் இறங்கி தங்களுடன் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.

இதையடுத்து வாளையாறு ரயில் நிலையத்தில் இறங்கிய இரு வியாபாரிகளையும், காரில் அழைத்துச் சென்ற மர்ம நபர்கள் வழியில், இறக்கி விட்டு விட்டு ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.இச்சம்பவம் தொடர்பாக வாளையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் வியாபாரிகளிடமிருந்து பணத்தை கொள்ளை படித்த கேரளாவை சேர்ந்த சதீஷ் (37), ராஜீவ் (34), ரஞ்சித் (28), அஜீஷ் (37) ஆகிய நான்கு பேர் கைது செய்தனர்.
