
கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. ரேசன் அரிசி மற்றும் குருணை, மாவு பறிமுதல். இன்ஸ்பெக்டர் இராணி அதிரடி நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சில ரைஸ் மில் களில் ரேசன் அரிசி கள் பதுக்கி அரைத்து விற்பனை செய்வதாக கழுகுமலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கழுகுமலை இன்ஸ்பெக்டர் இராணி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் ஜோசப், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுப்பாராஜ் மற்றும் போலீசார் கழுகுமலை பகுதிகளில் உள்ள ரைஸ் மில் களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இதில் கழுகுமலை வேத கோயில் தெருவில் இயங்கி வந்த ரைஸ் மில்லில் சோதனை செய்ததில் அதில் ரேசன் அரிசி 240 கிலோ, குருணை அரிசி 40 மூடைகள், மாவாக 35 மூடைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மில் உரிமையாளர் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்த சேவியர் (55), மற்றும் அதே பகுதியை சேர்ந்த அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் அலெக்ஸ்இனிகோஜேம்ஸ், (23), கஸ்பார் (18), கழுகுமலை பாலசுப்பிரமணியன் தெருவை முத்துக்குமார் (41), உள்ளிட்ட நான்கு பேரிடமும் இன்ஸ்பெக்டர் இராணி விசாரணை நடத்தினார். தொடர்ந்து நால்வரையும் கைது செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து கழுகுமலை பகுதிகளில் உள்ள அனைத்து ரைஸ் மில்களிலும் இன்ஸ்பெக்டர் இராணி அதிரடி சோதனை நடத்தினார். ரேசன் அரிசியை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.