• Fri. Apr 19th, 2024

இன்றுடன் மூடப்படுகிறது 3ஜி நெட்வொர்க்!

4ஜி எல்டிஇ மற்றும் 5ஜி போன்ற நெட்வொர்க்குகளின் தேவை அதிகரித்து இருப்பதால் 3ஜி சேவை நிறுத்தப்படுகிறது.இருபது வருடங்களுக்கு முன்பு பெரும்பாலான போன்கள் 3ஜி நெட்வொர்க்குகள் மூலம் தான் இயங்கி வந்தது. கார்களுடன் ஜி.பி.எஸ் அமைப்புகளை இணைக்கவும் மற்றும் பயணத்தின்போது பல பணிகளைச் செய்வதைற்கும் இது பயன்பட்டது.

ஆனால் தற்போது 4ஜி எல்டிஇ மற்றும் 5ஜி போன்ற நெட்வொர்க்குகளின் தேவை அதிகரித்து இருப்பதால் 3ஜி சேவை நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக சில சாதனங்கள் பாதிப்பிற்குள்ளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22 செவ்வாய்கிழமையன்று ஏடி & டி, 3ஜி சேவையை நிறுத்தியது.

மார்ச் 31 அன்று டி-மொபைல் மற்றும் டிசம்பர் 31 அன்று Verizon நிறுத்தும் என்று கூறப்படுகிறது.2015 ஆம் ஆண்டிற்கு முன்னதாக வெளியிடப்படாத தொலைபேசி இருந்தால், உங்களுக்கு பிரச்சனை இல்லை. ஒவ்வொரு கேரியரும் அதன் தற்போதைய நெட்வொர்க்கில் தொடர்ந்து செயல்படும் சாதனங்களின் முழுப் பட்டியலைக் கொண்டுள்ளது, இதில் நீங்கள் பாதிக்கப்பட்டால் உங்கள் கேரியர் உங்களுக்குச் சொல்லிவிடும். மேலும் எக்ஸ்பைரியான சாதனங்களை 4G LTE நெட்வொர்க்குகளுடன் இணைக்கும் புதிய சாதனங்களை மாற்ற அறிவிப்பு விடுக்கப்படும்.

இதுகுறித்து ரெகன் அனலைடிக்ஸ் ஆய்வாளர் ரோகர் என்டனர் கூறுகையில், தற்போது 3ஜி போன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நூறாயிரக்கணக்கில் தான் உள்ளது, பல மக்கள் அவர்கள் 3ஜி போன்களை மேம்படுத்தவில்லை.

மேலும் சிலர் இதனை மாற்ற மறந்திருக்கலாம் அல்லது அவர்கள் பழைய மொபைல்களை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.4ஜி எல்இடி அல்லது 5ஜி-க்கு மாற்றப்படாத பழைய 3ஜி சாதனங்கள் இதனால் செயல்படாமல் பயனற்றதாகிவிடும்.

இதனால் பாதிக்கப்படுவது போன்கள் மட்டுமல்ல, தானியங்கி நேவிகேஷன் அமைப்புகள், அலாரம் அமைப்புகள், மின்-வாசிப்புகள், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் கேஜெட்டுகள் போன்ற தொழில்நுட்பத்தையும் இது பாதிக்கிறது. 3ஜி சம்மந்தப்பட்ட சாதனங்கள் வைத்திருப்பவர்கள் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் அறிவுறுத்தியுள்ளபடி புதிய சாதனத்தை மாற்றுவதே சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *