• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் 39வது தேசிய புத்தக கண்காட்சி

ByP.Thangapandi

May 10, 2025

உசிலம்பட்டியில் பல்வேறு அமைப்புகள் இணைந்து இன்று முதல் 20 ஆம் தேதி வரை நடத்தும் 39வது தேசிய புத்தக கண்காட்சியை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவர் அறக்கட்டளை, உசிலம்பட்டி அரிமா சங்கம், உசிலம்பட்டி ரோட்டரி சங்கம், கட்டட பொறியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து 39 வது தேசியப் புத்தகக் கண்காட்சி இன்று முதல் 20 ஆம் தேதி வரை 10நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த புத்தக கண்காட்சியில் அப்துல் கலாமின் எழுச்சியூட்டும் எண்ணங்கள், இறையன்புவின் வையத்தலைமை கொள், போர்த்தொழில் பழகு, தா.பாண்டியன், தொ.பரமசிவன் -ன் பொதுவுடைமை நூல்கள், புலமை வெங்கடாச்சலம் எழுதிய சட்டம் சார்ந்த நூல்கள், ஜெயசீல ஸ்டீபன் எழுதிய தமிழியல் நூல்கள், சிவசுப்பிரமணியனின் வரலாற்று சிறப்பு மிக்க நூல்கள், சிறுகதை தொகுப்புகள் என 10ஆயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டு 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கி சென்றார். பல்வேறு சங்கம் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகளும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.