• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு 39 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

ByP.Kavitha Kumar

Feb 11, 2025

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளத

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதாட கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்க கடந்தாண்டு டிசம்பர் 20-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில் எடுத்த முடிவுகளின் படி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வேத பகத்சிங், புருஷோத்தமன், செந்தில் முருகன், பரணிதரன், ஹர்ஷாராஜ் உள்ளிட்ட 8 வழக்கறிஞர்கள் சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அஸ்வினி தேவி, சித்தார்த், சரவணன், இந்துபாலா உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களாக பாஸ்கரன், உதயகுமார் உள்ளிட்ட 7 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உமாகாந்த், கருணாநிதி, வெங்கட சேஷய்யா உள்ளிட்ட 16 வழக்கறிஞர்கள், உரிமையியல் தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் வழக்கறிஞர்களாக ஆஜராவார்கள்.

வரி தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் அஜாராக வழக்கறிஞர் செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற
மதுரை கிளையில் மொத்தமாக 39 புதிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழக்குகளில் அரசு தரப்பிற்கு ஆஜராகி வாதாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.