திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்றில் சித்தம்பலம் சாந்தி கார்டன் பகுதியில் குட்கா பொருள்களை காரில் ஏற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சொகுசு காரில் குட்கா பொருள்களை ஏற்றிக் கொண்டிருந்த பிரேம்குமாரை வளைத்துப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 378 கிலோ பொருள்களையும் ஒரு சொகுசு காரையும் பறிமுதல் செய்து பிரேம்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

