• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

37 வருடமாக போராடியும் பலனில்லை -தேனி கலெக்டரிடம் மனு

Byvignesh.P

Jul 12, 2022

அடி திட்ட சாலையை அமைக்க வலியுறுத்தி போடி குலாலர் பாளைய குடியிருப்போர் நல சங்கம் சார்பில் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போடி குலாலர் பாளையத்தில் உள்ள கணபதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இவர்கள் அளித்த இந்த கோரிக்கை மனுவில், தாங்கள் வசிக்கின்ற பகுதியில் 60 அடி திட்டச்சாலை அமைக்க வலியுறுத்தி கடந்த 37 வருடமாக இப்பகுதி மக்கள் போராடி வருவதாகவும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக இப்பகுதியில் சாலை அமைத்து தர வலியுறுத்தியும் போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த கணபதி நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் இடம் கோரிக்கை மனு அளித்தனர்.