திபெத்தில் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின.

இதனைத் தொடர்ந்து, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி மற்றும் பெட்டையா மாவட்டங்களிலும் உணரப்பட்டது. திபெத்தின் ஷிகத்சே நகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
திபெத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உள்பட 6 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டது. இதில் 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 38 பேர் காயமடைந்தன. மேற்கு சீனாவில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலநடுக்கம் இந்தியா, நேபாளம் மற்றும் பூடானிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி, டெல்லி-என்சிஆர் மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன.
பீகார் தலைநகர் பாட்னா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.




