• Fri. Apr 19th, 2024

உதகை அருகே ஐயப்பன் கோவிலில் 30ம் ஆண்டு தேர் திருவிழா

உதகையை அடுத்த எல்லநள்ளி பகுதியில் ஐயப்பன் கோவிலில் 30ம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூ குண்டம் இறங்கிய ஐயப்ப பக்தர்கள் தரிசனம்.
உதகையை அடுத்த எல்லநள்ளி பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், நடப்பாண்டின், 30ம் ஆண்டு மண்டல மஹா உற்சவம் தேர் திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், ஐயப்பன், மஞ்சமாதா சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனையுடன் பூஜை நடைப்பெற்றது. இக் கோயிலின் தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


ஐயப்ப பக்தர்கள் வடம்பிடித்து தேர் பவனியை எடுத்து சென்றனர். பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செண்டை மேளம் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து தேர் பவனி எல்லநள்ளி ஐயப்பன் கோவிலை வந்தடைந்தது.இதனை தொடர்ந்து 9ம் ஆண்டு பூ குண்டம் நடைப்பெற்றது. இதில் ஐயப்ப பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராஜேந்திரன், யோகேஷ், கார்த்தி, மணிகண்டன், சந்தோஷ், குமார், ஸ்ரீதரன், சுரேஷ், நாராயணன், ராஜேஷ் மற்றும் குருசாமிகள் சிவா சதீஷ் நாகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *