• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கோவாவில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 300 பேர்!..

Byமதி

Oct 24, 2021

பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தை தவிர்த்து மற்ற ஆறு மாநிலங்களிலுமே பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், கோவாவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல்வரான மம்தா பானர்ஜி வருகிற 28ஆம் தேதி கோவாவுக்கு வருகிறார்.

கோவாவில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வரும் நிலையில், பனாஜி, நேவலிம் மற்றும் சங்குவெம் ஆகிய 3 பகுதிகளில் நடந்த வெவ்வேறு நிகழ்ச்சிகளில் 300 பேர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தனர்.

மேலும் திரிணாமுல் காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான பலீரோ கூறும்போது, இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது. நம்ப தகுந்த மாற்றம் இந்நேரத்தின் அவசியம். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். மம்தாவின் தலைமையின் கீழ் மட்டுமே இது நடைபெறும் என கூறியுள்ளார்.